குழந்தைகளுக்கான சத்து மாவு செய்ய தேவையானப் பொருட்கள் மற்றும் கஞ்சி செய்முறை

        பல தானியங்களின் சத்துக்கள் நிறைந்த இந்த சத்து மாவு, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகிறது. குழந்தைகளின் எடையை அதிகரிக்கவும், அவர்களை வலுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த சத்து மாவைப் பயன்படுத்தி கஞ்சியாகவோ, சத்து மாவு உருண்டைகளாகவோ (ladoo) அல்லது தோசையாகவோ செய்து குழந்தைகளுக்குக் கொடுக்காலாம்.




சத்து மாவு செய்ய தேவையானப் பொருட்கள்

1. சம்பா கோதுமை - 1/4
கிலோ கிராம்
2. கேழ்வரகு          - 1/4 கிலோ கிராம்
3. கம்பு                     - 1/4 கிலோ கிராம்
4. சோளம்               - 1/4 கிலோ கிராம்
5. பாசிப்பயறு      - 1/4 கிலோ கிராம்
6. மக்காச்சோளம்       - 100 கிராம்
7. பொட்டுக்கடலை    - 100 கிராம்
8. சோயா பீன்ஸ்          - 100 கிராம்
9. வேர்க்கடலை           - 100 கிராம்
10. உளுந்து                    - 100 கிராம்
11. பாதாம்                       - 50 கிராம்
12. முந்திரி                      - 50 கிராம்
13. வெள்ளை சுண்டல் - 10 கிராம்
14. கருப்பு சுண்டல்         - 10 கிராம்
15. ஏலக்காய்                     - 2 அல்லது 3

  • தேவைப்பட்டால் இதனுடன் சிறுதானிய வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இவற்றையெல்லாம் மிதமான தீயில் வறுத்து, நன்கு ஆற வைத்தப் பின்பு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

கஞ்சி தயாரிக்கும் முறை:
  • இரண்டு தே.கரண்டி சத்து மாவை எடுத்துக்கொண்டு அதை ஒரு டம்ளரில் தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு தே.கரண்டி நாட்டுச்சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து காய்ச்சி, அதனை தூசுகள் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.
  • இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து, மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.
  • கெட்டியான நீர்த்த பதத்திற்கு (Semi solid) வந்தபின், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
  • மிதமான வெதுவெதுப்பான சூட்டில் பருகினால் நல்ல சுவையாக இருக்கும்.

குறிப்பு:
  • குழந்தை பிறந்து 8 மாதத்திற்கு பிறகு இந்த சத்து மாவை கொடுக்க வேண்டும்.

    "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment