பாட்டி வைத்தியம் - 4

 

  • முருங்கைக்காய் --> வாதம் போகும். ஆண்மை தூண்டும். விந்து உண்டாகும்.
  • முருங்கைப்பட்டை --> ஜன்னி, சுரம், கபம், பேதி, வாயு போக்கும்.
  • முருங்கையிலை --> தலை நோய், மந்தம், மூர்ச்சை, வெப்பு நீங்கும்.
  • முருங்கைப்பூ--> பித்தம், வெப்பு போக்கும். விழி குளிர்ச்சி உண்டாகும். 
  • முருங்கை இலைச்சாறு --> உஷ்ணம் போக்கும்.
  • முல்லைப்பூ --> மனநோய் போக்கும்.
  • முள்முருங்கைப்பூ --> பெண்களுக்கு உதிரக்கட்டுப் போக்கும்.
  • முள்ளங்கிக் கிழங்கு --> இரைப்பு, கடுகடுப்பு, காசம், கரப்பான், குடல் வாதம், குன்மம், சூலை நோய், வயிற்றெரிச்சல்,  வாதம் போக்கும்.
  • முள்ளங்கி இலை --> நெஞ்செரிச்சல், கிருமி, குன்மவலி போக்கும்.
  • வெந்தயம் --> எரிவு,  கபம், சீதக்கழிச்சல், பௌத்திரம் போகும். தேகம் குளிர்ச்சி பெறும். மமுடி உதிர்வதைத் தடுக்கும்.
  • வெந்தயக்கீரை --> கபம், பொருமல், மந்தம் போகும்.
  • வெந்நீர் --> இருமல், கம்மல், சீதக்கட்டு, கண் நீர் வடிதல், முகசன்னி, வாதசன்னி மறையும்.
  • வெள்ளரிக்காய் --> நீர்க்கடுப்பு, கரப்பான், உள்ளரிப்பு தீரும்.
  • கடுகெண்ணெய் --> வயிற்று நோய், வாதம் தீரும்.
  • கஸ்தூரி மஞ்சள் --> சுக்கில உற்பத்தி பெருக்கும்.
  • கருஞ்சீரகம் --> கண் நோய், கரப்பான்,  காய்ச்சல், தலைவலி தீரும். தேகம் குளிரும்.
  • கசகசா --> தூக்கம் வரும், உஷ்ணம் தீரும், சிறுநீர் பிரியும், அழகு கூடும், விந்து பெருகும்.

No comments:

Post a Comment