பாட்டி வைத்தியம் - 5

 

  • முள்ளங்கி இலை --> நெஞ்செரிச்சல், கிருமி, குன்மவலி போக்கும்.
  • வெந்தயம் --> எரிவு,  கபம், சீதக்கழிச்சல், பௌத்திரம் போகும். தேகம் குளிர்ச்சி பெறும். மமுடி உதிர்வதைத் தடுக்கும்.
  • வெந்தயக்கீரை --> கபம், பொருமல், மந்தம் போகும்.
  • வெந்நீர் --> இருமல், கம்மல், சீதக்கட்டு, கண் நீர் வடிதல், முகசன்னி, வாதசன்னி மறையும்.
  • வெள்ளரிக்காய் --> நீர்க்கடுப்பு, கரப்பான், உள்ளரிப்பு தீரும்.
  • அரைக்கீரை --> சிறுநீர்க் கோளாறுகளை சரியாக்கும்.
  • பெருங்காயம் --> வாயு நீங்கும்.
  • நன்னாரி --> சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
  • கீழாநெல்லி --> மஞ்சள் காமாலை போக்கும்.
  • கறிவேப்பிலை --> பித்தம் தீரும். சரும நோய் தீரும்.
  • குப்பைமேனி -> ஒற்றைத் தலைவலி நீங்கும்.
  • வேர்க்கடலை  --> காச நோயைத் தடுக்கும்.
  • நந்தியாவட்டைப்பூ --> கண் எரிச்சல் போகும்.
  • பால் --> குடல் புண் நீக்கும்.
  • முட்டைகோஸ் --> இரைப்பையை பலப்படுத்தும்.
  • சுக்கு --> பித்தம் தீர்க்கும்.
  • பசலிக்கீரை --> கைகால் அசதி நீங்கும்.
  • குமட்டிக்கீரை --> சீதம், வாயு நீங்கும்.
  • கேழ்வரகு கூழ் --> பித்தம் தீரும், வயிறு உப்புசம், தொந்தியைக் குறைக்கும்.
  • தேன் --> இருமல், கண் நோய், சுரம், விஷம் போகும். குரல் இனிமை கூடும்.
  • கொத்துமல்லிக்கீரை --> பித்த சுரங்கள் தீரும்.
  • நல்ல மிளகு --> இருமல் தீரும்.
  • நாய்த்துளசி --> குத்தி இருமல், அழல், கபம் தீரும். 
  •  

    "நலமுடன் வாழ்வோம்;  
    தமிழ் போல் வளர்வோம்."


No comments:

Post a Comment