பாட்டி வைத்தியம் - 2

  • பண்ணைக்கீரை --> சீதம், சிரங்குப்புண், கரப்பான், ஆகியன போகும். மலம் இளகும்.
  • பப்பாளி --> ஜீரணமாகும், இரத்தம் உற்பத்தியாகும். 
  • பலாக்காய் --> இளைப்பு, இரைப்பு, மந்தம், வாதம் போக்கும். விந்து உற்பத்தி பெருகும்.
  • பலாக்கொட்டை --> மலக்கட்டு, மலக்கருகல் போக்கும்.
  • பலாப்பிஞ்சு --> தாகம், பித்தம் போக்கும்.
  • பன்றிநெய் --> நீர்க்கடுப்பு, வாதக்கடுப்பு, ஆசன மூலம் போகும்.
  • பிரண்டை --> முளைமூலம், மூலத்தினவு, வயிற்றுவலி, வாயு போகும். பசி தூண்டும்.
  • மணத்தக்காளிக்காய் --> வாதம், கபம், தணல், மலமிளக்கம்.
  • மணத்தக்காளி இலை --> வாய் வேக்காடு போகும்.
  • மரிக்கொழுந்து--> கண்நோய் நீங்கும்.
  • மாதுளம் பிஞ்சு --> இரத்தக் கழிச்சல், சலக்கழிச்சல், சீதக் கழிச்சல் போகும்.
  • மாதுளம்பூ --> இரத்த மூலம், கடுப்பு, பித்த தோஷம்,  வாந்தி போக்கும். பலம் உண்டாகும்.
  • முருங்கைக்காய் --> வாதம் போகும். ஆண்மை தூண்டும். விந்து உண்டாகும்.
  • முருங்கைப்பட்டை --> ஜன்னி, சுரம், கபம், பேதி, வாயு போக்கும்.
  • முருங்கையிலை --> தலை நோய், மந்தம், மூர்ச்சை, வெப்பு நீங்கும்.
  • முருங்கைப்பூ--> பித்தம், வெப்பு போக்கும். விழி குளிர்ச்சி உண்டாகும். 
  • முருங்கை இலைச்சாறு --> உஷ்ணம் போக்கும்.
  • முல்லைப்பூ --> மனநோய் போக்கும்.
  • முள்முருங்கைப்பூ --> பெண்களுக்கு உதிரக்கட்டுப் போக்கும்.
  • முள்ளங்கிக் கிழங்கு --> இரைப்பு, கடுகடுப்பு, காசம், கரப்பான், குடல் வாதம், குன்மம், சூலை நோய், வயிற்றெரிச்சல்,  வாதம் போக்கும்.
  • முள்ளங்கி இலை --> நெஞ்செரிச்சல், கிருமி, குன்மவலி போக்கும்.
  • மூங்கில் அரிசி --> இரத்த பித்தம், கண் நோய், சுரம் போக்கும்.
  • முடக்கற்றான் --> அண்ட வாதம், கரப்பான், சூலைப்பிடிப்பு, சொறி, சிரங்கு, மலச்சிக்கல்,  வாயு போக்கும்.
  • மோர்சோறு --> எரிச்சல் போகும், பித்தம் தீரும், தூக்கம் பிடிக்கும், பிரமை நோய் நீங்கும்.
  • வல்லாரை --> வச்சரம், இரத்தக் கடுப்பு, உடம்பெரிச்சல், உள்மூலம், நீரெரிச்சல், பைத்தியம், கழிச்சல் தீரும்.


 "நலமுடன் வாழ்வோம்; 

  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment