வெற்றிலை சாதம் (Betel leaves rice)
தேவையானப் பொருள்கள்:
1. வெற்றிலை - 5 முதல் 10
2. மிளகு - 1 தே.கரண்டி
3. சீரகம் - 2 தே. கரண்டி
4. பூண்டு - 5 முதல் 7 பல்கள்
5. சின்ன வெங்காயம் - 5 முதல் 10
6.வேர்க்கடலை - சிறிதளவு
7.கடலைப்பருப்பு- சிறிதளவு
8. உளுந்து - சிறிதளவு
9. கடுகு - 1/2 தே. கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிதளவு
11. தேங்காய் துருவல் - 1 கப்
12. வேக வைத்த சாதம் - 2 1/2 கப்
13. நல்லெண்ணெய் - 1 மேஜை கரண்டி
14. மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
15. காய்ந்த மிளகாய் - 3 வற்றல்
16. உப்பு - தேவையான அளவு
- வெற்றிலையின் காம்பு பகுதியை நீக்கி சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைக்க தேவையானப் பொருட்கள்:
( மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களிலிருந்து)
- கடாயில் மிளகு, சீரகம், வெற்றிலை, 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து மிதமான தீயில் வறுத்து, நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் வேர்க்கடலை சேர்க்கவும். (முந்திரி)
- மீதமுள்ள தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
- அரைத்தக் கலவையை சேர்த்து நன்கு வதங்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- சூடான, சுவையான, சத்தான வெற்றிலை சாதம் தயார்.
பலன்கள்:
- அஜீரணக்கோளாறை நீக்கும்.
- நெஞ்சு சளியை விரட்டும்.
குறிப்பு:
- வெற்றிலையும் காரம் என்பதால், குழந்தைகளுக்கு செய்யும் போது தேவைக்கு ஏற்ப காரத்தைக் குறைத்துக்கொள்ளவும்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment