சளியை விரட்டும் வெற்றிலை சாதம்

வெற்றிலை சாதம் (Betel leaves rice)

தேவையானப் பொருள்கள்:
 
1. வெற்றிலை  - 5 முதல் 10 

2. மிளகு     - 1 தே.கரண்டி

3. சீரகம்     -  2 தே. கரண்டி

4. பூண்டு   - 5 முதல் 7 பல்கள்

5. சின்ன வெங்காயம் - 5 முதல் 10            
                              
6.வேர்க்கடலை  - சிறிதளவு

7.கடலைப்பருப்பு- சிறிதளவு

8. உளுந்து        - சிறிதளவு

9. கடுகு         - 1/2 தே. கரண்டி

10. கறிவேப்பிலை  - சிறிதளவு

11. தேங்காய் துருவல் - 1 கப்

12. வேக வைத்த சாதம்  - 2 1/2 கப்

13. நல்லெண்ணெய்      - 1 மேஜை கரண்டி

14. மஞ்சள் தூள்      - 1/4 தே.கரண்டி

15. காய்ந்த மிளகாய்      - 3 வற்றல்

16. உப்பு           - தேவையான அளவு

  • வெற்றிலையின் காம்பு பகுதியை நீக்கி சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைக்க தேவையானப் பொருட்கள்:
( மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களிலிருந்து)
  •  கடாயில் மிளகு, சீரகம், வெற்றிலை,     1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து  மிதமான தீயில் வறுத்து, நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வேர்க்கடலை சேர்க்கவும். (முந்திரி)
  • மீதமுள்ள தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
  • அரைத்தக்  கலவையை சேர்த்து நன்கு வதங்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • சூடான, சுவையான, சத்தான வெற்றிலை சாதம் தயார்.
பலன்கள்:
  • அஜீரணக்கோளாறை நீக்கும்.
  • நெஞ்சு சளியை விரட்டும்.
குறிப்பு:
  • வெற்றிலையும் காரம் என்பதால், குழந்தைகளுக்கு செய்யும் போது தேவைக்கு ஏற்ப காரத்தைக் குறைத்துக்கொள்ளவும்.

    "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment