தலைமுடி அடர்த்தியாக வளர இயற்கை வழிமுறை



தேவையானப் பொருள்கள்:

1. கரிசலாங்கண்ணி - 3 கைப்பிடி

2. மருதாணி        - 1 கைப்பிடி

3.செம்பருத்தி இலை   - 2 கைப்பிடி

4. செம்பருத்தி பூக்கள்  - 5                            முதல்  10 பூக்கள்

5. வேப்பிலை     - 1 கைப்பிடி

6. கொய்யா இலை  - 1  கைப்பிடி

7. கறிவேப்பிலை  - 1                                                    கைப்பிடி

8. சின்ன வெங்காயம்   
  - 10

9. பெரிய நெல்லிக்காய்  - 5

10.வெந்தயம்(ஊற வைத்தது) -25                                              முதல் 50 கிராம்

11. பாதாம்(ஊற வைத்தது)                                                 - 5

12. தேங்காய் எண்ணெய் - 1                                        லிட்டர்

13. விளக்கெண்ணெய் - 25                               மில்லி லிட்டர்   

14. கற்றாழை - 2 அல்லது 3                             துண்டு (ஜெல்)


செய்முறை:
  •  அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை ஊற்றி 10 நிமிடம் சூடேற்றவும் பின்பு அரைத்தக் கலவையை சேர்த்து மிதமான தீயில் 45 நிமிடம் கொதிக்க விடவும்                      (கருகிவிடாமலிருக்க இடை இடையே கிளறி விட வேண்டும்). பின்னர் சூடு ஆறியதும் நன்கு வடிகட்டி சேகரித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் தேவைப்பட்டால் இதனுடன் 500 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்துக்கொள்ளலாம். 

உபயோகிக்கும் முறை:
  •  தினமும் தலையில் தேய்த்துக் கொள்ளலாம் அல்லது வாரம் இரண்டு, மூன்று முறைப் பயன்படுத்தலாம்.

பலன்கள்:
  •  அடர்த்தியான தலைமுடி  வளரவும், இளநிரை நீங்கவும், வழுக்கையான இடத்தில் முடி வளரவும், தலைமுடி  உதிர்வதைத் தடுக்கவும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இந்த ஆரோக்கியமான எண்ணெய் பயன்படுகிறது. 

குறிப்பு:
  • கிடைத்தப் பொருட்களைப் பயன்டுத்தியும் செய்யலாம்.

   "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."







        

1 comment: