மூலிகை சாம்பிராணி

பல நன்மைகளைக் கொடுக்கும் மூலிகை சாம்பிராணி வீட்டில் செய்வது எப்படி?

தேவையானப் பொருட்கள்:
  1. வெண்கடுகு
  2. நாய் கடுகு
  3. வலம்புரி
  4. இடம்புரி
  5. வெட்டி வேர்
  6. விலாமிச்சை வேர்
  7. அகில் கட்டை
  8. தேவதாரு பட்டை
  9. வேப்பிலை பொடி
  10. மருதாணி விதை
  11. ஆலங்குச்சி
  12. அரசங்குச்சி
  13. நன்னாரி
  14. நாவல்மரகுச்சி
  15. சடமாஞ்சில்
  16. வில்வ இலை பொடி
  17. அருகம்புல் பொடி
  18. கருப்பு குங்கிலியம்
  19. வெண் குங்கிலியம்
  20. பேய் மிரட்டி
  21. கட்டி சாம்பிராணி 
  • வலம்புரியும் மற்றும் இடம்புரியும் சேர்த்து 50 கிராம் எடுத்துக்கொள்ளவும்.
  • மற்றப் பொருட்கள் ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை:
  • கருப்பு குங்கிலியம் மற்றும் வெண் குங்கிலியம் இவை இரண்டையும் தனியாகப் பொடித்துக்கொள்ளவும். (கடைசியாக மற்ற பொருள்களுடன் சேர்த்துக்கொள்ளவும்).

  • கட்டி சாம்பிராணியை தனியாகப் பொடித்துக்கொள்ளவும். இதனை நாம் சாம்பிராணி தூபம் போடும்போது சேர்த்துக்கொள்ளவும். ஏனென்றால், மற்றப் பொருள்களுடன் கலந்து வைக்கும் போது கட்டியாகிவிடும்.
  • இப்பொழுது மற்றப் பொருள்களை பொடியாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடித்து வைத்துள்ள கருப்பு மற்றும் வெண் குங்கிலியம் பொடியையும் கலந்துக்கொள்ளவும்.
தூபம் போடும் முறை:
  • கரித்துண்டு அல்லது தேங்காய் சிரட்டை கொண்டு நெருப்பு உண்டாக்கி, தூபக்காலில் போட்டு, நாம் தயாரித்து வைத்துள்ள மூலிகை பொடியும் மற்றும் சாம்பிராணியும் சிறிதளவு சேர்த்து, வீடு முழுவதும் தூபம் காட்டவும்.
பலன்கள்:
  • லட்சுமி கடாட்சம் கிடைக்கவும்
  • கண் திருஷ்டி நீங்கவும்
  • தூக்கமின்மையைப் போக்கவும்
  • விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கவும்
  • எதிரிகளை விரட்டவும்
  • தீய சக்திகள் வராமல் தடுக்கவும்.
சித்தர்கள் அருளிய இந்த மூலிகை சாம்பிராணி பயன்படுகிறது.

குறிப்பு:
  • இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
  • கிடைத்தப் பொருள்களைப் பயன்படுத்தியும் மூலிகை சாம்பிராணி தயாரிக்கலாம்.
      
     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."



No comments:

Post a Comment