இயற்கை அழகு தரும் குளியல் பொடி

தேவையானப் பொருள்கள்:
  1. பாசி பயறு       - 350கிராம்
  2. கஸ்தூரி மஞ்சள்    - 100 கிராம்
  3. விரலி மஞ்சள்         - 5
  4. நாட்டு ரோஜா இதழ்கள்  - 100 கிராம்
  5. ஆவாரம் பூ                        - 100 கிராம்
  6. ஆரஞ்சுப் பழத்தோல்   - 100 கிராம்
  7. வெட்டிவேர்                        - 100 கிராம்
  8. பூலாங்கிழங்கு               - 100 கிராம்
  9. கோரைக்கிழங்கு          - 100 கிராம்
  10. எலுமிச்சை தோல்         - 5
  11. பூசு மஞ்சள்                       - 3
  12. தீருநீற்றுப் பச்சிலை    - 100 கிராம்
செய்முறை:
  • நாட்டு ரோஜா இதழ்கள்,ஆவாரம் பூ, திருநீற்றுப் பச்சிலை, ஆரஞ்சுப் பழத்தோல் மற்றும் எலுமிச்சை தோல் இவற்றை நன்றாக காய வைத்துக்கொள்ளவும்.
  •  கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், பூசு மஞ்சள், வெட்டிவேர், பூலாங்கிழங்கு மற்றும் கோரைக்கிழங்கு இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி வெயிலில் காய வைத்துக்கொள்ளவும்.
  • பாசி பயறையும் வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.
  • அனைத்துப் பொருள்களையும் மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
  • இந்த பொடியை பால் அல்லது தயிர் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி வர, முகம் பொலிவு பெறும்.
  • குளிக்கும் போது, சோப்பிற்கு பதில் இந்த பொடியை தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
பலன்கள்:
  • சரும பிரச்சனை நீங்கவும்.
  • முகத்தில் உள்ள பருக்கள் மறையவும்.
  • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கவும்.
  • தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, முகம் மற்றும் தோல் பொலிவு பெறுவதை உணரலாம்.

குறிப்பு:
  • அனைத்து வயது பெண்களும் பயன்படுத்தலாம்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."






No comments:

Post a Comment