கறிவேப்பிலை பொடி மற்றும் அதன் பயன்கள்

           நமது பாரம்பரிய சமையல் முறையில் கறிவேப்பிலை நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. சமையலில் வாசனைக்காக கறிவேப்பிலை பயன்படுகிறது. ஆனால்,  மருத்துவ குணங்கள் நிறைந்த, காரம் கலந்த கசப்புத்தன்மைக் கொண்ட இந்த கறிவேப்பிலையை சிலர் சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகின்றனர்.



கறிவேப்பிலையின் பயன்கள்:
  • இரத்தசோகையைக் குணப்படுத்தும்.
  • சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
  • வலுவான முடி வளர உதவுகிறது.
  • வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவைக்கு உகந்தது.
  • கண்பார்வைக்கு நல்லது.
  • செரிமானத்திற்கு நல்லது.
கறிவேப்பிலைப் பொடி செய்முறை:
  • கறிவேப்பிலையை நன்றாக நீரில் சுத்தம் செய்து, ஒரு துணியில், நிழலில் உலர்த்தி காய வைக்கவேண்டும்.
தேவையானப் பொருட்கள்:

  • காய்ந்த கறிவேப்பிலை   - 3 கைப்பிடி 
  • துவரம் பருப்பு          - 1/4 கப்
  • கடலைப் பருப்பு       - 1/4 கப்
  • உளுத்தம் பருப்பு    - 1/4 கப்
  • கொத்தமல்லி விதை(தனியா)               - 1 மேஜை கரண்டி
  • பொட்டுக்கடலை - 1 மேஜை கரண்டி
  • சீரகம்                       - 1 தே. கரண்டி
  • மிளகு                       - 1/2 தே. கரண்டி
  • காய்ந்த மிளகாய் வற்றல்   - 4 (காரத்திற்கேற்ப)
  • பெருங்காயம்          - சிறிதளவு 
  • உப்பு                           - சிறிதளவு 

செய்முறை:
  • அனைத்துப் பொருட்களையும் மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • சூடு ஆறிய பின் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:
  • சூடான சாதத்துடன், நெய் மற்றும் இப்பொடியை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
  • இட்லி, தோசைக்கு பயன்படுத்தலாம்.

குறிப்பு:
  • தேவையென்றால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."


No comments:

Post a Comment