Showing posts with label உணவே மருந்து. Show all posts
Showing posts with label உணவே மருந்து. Show all posts

புதினா தொக்கு செய்யலாமா??!!

 

புதினா தொக்கு செய்முறை:
  • புதினா இலைகளை நன்றாக நீரில் சுத்தம் செய்து, ஒரு துணியில், 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி  கொள்ள வேண்டும். 


புதினா தொக்கு செய்ய தேவையானப் பொருட்கள்:

  • புதினா    - 1 கட்டு
  • கடலைப் பருப்பு -1 தே.கரண்டி
  • உளுந்துப் பருப்பு-1தே.கரண்டி
  • மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கேற்ப)
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு  - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் 

தாளிக்க தேவையானப் பொருட்கள்:

  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு   - சிறிதளவு 
  • பூண்டு   - 10 பல்கள் (பொடியாக நறுக்கியது)
  • பெருங்காயம் - சிறிதளவு 


  • புதினா தொக்கு செய்முறை:
    • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, மிளகாய் வற்றல், புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
    • சூடாறியபின் இவற்றுடன் புதினா இலைகள் மற்றும்  தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
    •  தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
    • சூடான சாதத்துடன், நெய் மற்றும்   புதினா தொக்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் கருப்பட்டி... கருப்பட்டியின் பயன்கள் அறிவோம்!!

         நம் தமிழ்நாட்டின் மாநில மரம் "பனை மரம்" என்பது நாம் அறிந்த ஒன்றே.... பனை மரத்திற்கும், நம் தமிழர் வாழ்வியலுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. சங்க கால நூல்களான தொல்காப்பியம்; சிலப்பதிகாரம்; திருக்குறள் போன்ற நூல்களில் பனை மரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் பல, பனை ஓலைச்சுவடிகள் மூலமாகவே நமக்கு கிடைத்தப் பொக்கிஷங்கள் ஆகும். 

    வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில், நன்கு வறட்சி தாங்கி மிக உயரமாக சுமார் 30 மீட்டர் வரை வளரகூடிய புல்லினத்தை சேர்ந்த தாவரமாகும். இளம் பனை மரங்கள் 'வடலி' என்று அழைக்கப்படுகிறது. நன்றாக முதிர்ச்சியடைந்த பனை மரமாக வளர 15 ஆண்டுகள் வரையாகும் என கருதப்படுகிறது. பனை மரத்தின் உச்சியில் விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். மரத்தின் இடைப்பட்டப் பகுதியில் வேறெந்த கிளைகளும் கிடையாது.

        பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருட்களை நமக்குத் தருகிறது. பனைமரத்தின் பூம்பாளையிலிருந்து எடுக்கப்படும் பதநீர், முதன்மையான உணவுப் பொருளாகும். பதநீரை மூலப்பொருளாகக் கொண்டு கருப்பட்டி என்கிற பனை வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கூழ் என பல்வேறு உணவுப் பொருளாக வடிவம் பெறுகிறது. மேலும் நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு ஆகியன கிடைக்கின்றது.

    பனையோலைப் பொருள்கள், மரப்பொருட்கள், தூரிகைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை பனைமரத்தின் மூலம் தயாரிக்கப்படும் உணவிலிப் பொருட்களாகும்.

    இந்த வலைப்பதிவில் பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் "கருப்பட்டி" பற்றி தெரிந்துகொள்ளலாம். 

    பனைமரத்திலிருந்துப் பெறப்படும் பதநீரை சேகரித்து, காய்ச்சுவதன் மூலமாக கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. ஒரு பனைமரத்திலிருந்துப் பெறப்படும் பதநீரிலிருந்து சுமாராக 24 கிலோ பனை வெல்லம் தயாரிக்கலாம். கருப்பட்டிக்கென தனிச்சுவை, மணம், மருத்துவ குணம் உள்ளது. கருப்பட்டியை, பனை வெல்லம்; கருப்புக்கட்டி; பனைஅட்டு; பானாட்டு என்றும் சொல்வார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனைமரங்கள் மூலமாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி,  ஆனி போன்ற மாதங்களில் பதநீர் அதிகமாக கிடைக்கும் காலங்களில் கருப்பட்டி அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மற்ற சமயங்களில் கருப்பட்டி உற்பத்தி குறைவாக காணப்படும். இதனால் வியாபார சந்தையில் கருப்பட்டி விலை கூடுதலாக இருக்கும். மேலும் போலி கருப்பட்டிகளின் விற்பனையும் அமோகமாக காணப்படுகின்றது. கருப்பட்டியின் மணத்தின் மூலம் போலியானவை எது? உண்மையான கருப்பட்டி எது? என அறியலாம்.

    உண்மையான கருப்பட்டி ஒரு டம்ளர் நீரில் கரைய ஒன்றரை மணி நேரமாகும். ஆனால் சர்க்கரைப்பாகு கலந்த போலி கருப்பட்டி அரைமணி நேரத்தில் கரைந்துவிடும்.


    கருப்பட்டியின் பயன்கள்:

    • கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
    • உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
    • பற்களும், எலும்பும் வலுப்பெற கருப்பட்டி சிறந்தது.
    • சீரகத்தை வறுத்து பொடித்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசியை தூண்டும்.
    • கருப்பட்டியுடன் சிறிதளவு ஓமத்தை சேர்த்து சாப்பிடுவதால் வாயு தொல்லை நீங்கும்.
    • சுக்கு; மிளகு; திப்பிலி கலந்த சுக்கு கருப்பட்டி நமது உடலுக்கு உகந்தது. நாள்பட்ட நெஞ்சுசளிக்கு சிறந்த மருந்து.
    • பருவம் அடைந்த பெண் குழந்தைகளுக்கு, கருப்பட்டி சேர்த்த உளுந்தங்கஞ்சி செய்து கொடுப்பதால், அவர்களின் இடுப்பு எலும்பு வலுப்பெறும். மேலும் கருப்பையும் வலுவடையும்.
    • கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், அதன் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
    • உணவு சாப்பிட்ட பின் சிறிதளவு கருப்பட்டித் துண்டை சாப்பிட்டால், செரிமான கோளாறுகள் நீங்கும்.
    • வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக நாம் கருப்பட்டியை பயன்படுத்துவதனால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.


    "நலமுடன் வாழ்வோம்;  
    தமிழ் போல் வளர்வோம்."

    மணத்தக்காளி கீரைக் கடையல் செய்யலாமா???

     



    தேவையானப் பொருள்கள்:

    • மணத்தக்காளி கீரை  - 1 கட்டு
    • துவரம் பருப்பு    -  100 கிராம்
    • சின்ன வெங்காயம் - 10
    • பூண்டு -- 10 பல்கள்
    • சீரகம்  - 1 மேஜைக்கரண்டி
    • தக்காளி - 1
    • பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கேற்ப)
    • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    • விளக்கெண்ணெய் - சிறிதளவு
    • தேவையான அளவு உப்பு




    தாளிக்கத் தேவையானப் பொருள்கள்:
    • நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    • நெய் - தேவைப்பட்டால்
    • கடுகு - சிறிதளவு
    • சீரகம் - சிறிதளவு
    • மிளகாய் வற்றல் - 2
    • பெருங்காயம் - சிறிதளவு
    • கறிவேப்பிலை - சிறிதளவு

    -----> மணத்தக்காளி கீரை இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அவற்றை நீரில் நன்றாக சுத்தம் செய்துக்கொள்ளவும்.


    செய்முறை:
    • ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, துவரம் பருப்பை சுத்தம் செய்து சேர்க்கவும்.





    • அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய், தக்காளி, சிறிதளவு விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
    • மற்றொருப் பாத்திரத்தில் அல்லது ஒரு மண் பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதனுடன் மணத்தக்காளி கீரையை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
    • கீரை வதங்கியதும் வேக வைத்த துவரம் பருப்பு கலவையை சேர்த்து, மத்து வைத்து நன்கு கடையவும்.



    • அடுத்து தாளிக்க தேவையானப் பொருள்கள் கொண்டுத் தாளிக்கவும்.
    • இப்போது சூடான சுவையான சத்தான மணத்தக்காளி கீரைக் கடையல் தயார்.
    • தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்ளவும்.

    "நலமுடன் வாழ்வோம்;  
    தமிழ் போல் வளர்வோம்."


    HOW TO PREPARE PIRANDAI IDLY POWDER AT HOME


    HOW TO PREPARE PIRANDAI IDLY POWDER AT HOME:

    INGREDIENTS:

    • Pirandai    - 1 bunch 
    • Chana dal - 1 cup
    • Urad dal - 1 cup
    • Dry red chilly - 10 nos.
    • Garlic - 10 cloves
    • Curry leaves - 1/2 cup
    • Tamarind - 1 small lemon size
    • Asafoetida - 1 spoon 
    • Salt - as required 
    • Sesame oil - 1 table spoon




    METHOD:
    • Clean and wash the veldt grape(Pirandai). Cut into it small pieces. When cleaning it, you apply some coconut oil on your hands. Because it can cause itching. 
    • Take a kadai, pour some gingelly oil, add veldt grape(pirandai). and saute well. Then strain that oil and keep aside. You can use that oil, if you have knee pain or joint pain.
    • Dry roast all the ingredients in low medium flame.



    • Let it rest for few minutes to cool.
    • Grind it all together to a fine powder. You can use your home mixer grinder.
    • Store the pirandai idly powder in a clean and dry airtight container in a cool and dry place. 

    மூட்டுவலி நீக்கும் முடக்கறுத்தான் கீரை(முடக்கற்றான் கீரை) மற்றும் முடக்கறுத்தான் கீரையின் பயன்கள்

    "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்    கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு  முடக்கற்றான் தனை மொழி."

                           -- சித்தர் பாடல்


    அன்றே சித்தர்கள் முடக்கறுத்தான் கீரையின் பயனைப் பற்றி தன் பாடல் வரிகளின் வழியாக, இந்த உலகிற்கு கூறியுள்ளார்கள்.






    ஏறு கொடி வகையை சார்ந்தது  இந்த முடக்கறுத்தான் கீரை. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதினால், இந்த மூலிகை முடக்கறுத்தான் கீரை எனப் பெயர் பெற்றது. தற்போதோ! காலப்போக்கில் பேச்சு வழக்கில் மருவி முடக்கத்தான் கீரை என மாறிற்று....

    பொதுவாக கிராமப்புறங்களில் மழைக்காலங்களில் மிக எளிதாக கிடைக்கும் கீரை வகை. முடக்கறுத்தான் கீரை ஏராளமான மருத்துக் குணங்களைக் கொண்டது. 






    இன்றைய நவீன இயந்திர உலகில், வேலைப்பளு; நேரமின்மை போன்ற பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளினால், சிறுநீர் கழிப்பதற்குக்கூட நேரமில்லாமல், சிறுநீர் வெளியேற்றுவதை நீண்ட நேரம் அடக்கிக்கொள்கிறோம். இவ்வாறு நாம் செய்வதனால், நாம் நம் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். இதனால் சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட வேண்டிய யூரிக் ஆசிட் வெளியேற இயலாமல், உடலின் பிற பகுதிகளுக்கு செல்கிறது. இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ்( Uric acid crystals)  மூட்டுகளில் படிந்துவிடுகிறது. இவ்வாறு பல வருடங்களாக படிந்து தங்கிவிடுகிறது. இதனால் இளம் வயதிலேயே மூட்டு, இடுப்பு, பாதம்  போன்றப் பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டு  ஆர்த்தரிட்டிஸ் (Arthritis) எனும் மூட்டுவலி நோயின் ஆரம்ப நிலையாகிறது.

    முடக்கறுத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் தன்மைக் கொண்டது. 

    முடக்கறுத்தான் கீரையை நம் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் எடுத்துக்கொள்ளும் போது, மூட்டுவலி; கீல்வாதம்; கீல் பிடிப்பு; கால்களை நீட்ட, மடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.


    முடக்கறுத்தான் கீரையிலுள்ள சத்துக்கள்:

    முடக்கறுத்தான் கீரையில் நார்ச்சத்து,  கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம்,  புரதம் போன்ற பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியவை. மேலும் முடக்கறுத்தான் கீரை ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் (Antioxidants) உள்ளது.





    முடக்கறுத்தான் கீரை உணவு வகைகள்:

    முடக்கறுத்தான் கீரை தோசை; முடக்கறுத்தான் கீரை சூப்; முடக்கறுத்தான் கீரைப் பொறியல்; முடக்கறுத்தான் கீரை துவையல் போன்றவற்றை,  முடக்கறுத்தான் கீரையைப் பயன்படுத்தி செய்யலாம்.


    முடக்கறுத்தான் கீரைப் பயன்கள்:

    • முடக்கறுத்தான் கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி, அந்த எண்ணெய்யை மூட்டுவலிக்கு தடவி கொள்ளலாம்.
    • மலச்சிக்கல், மூல நோய், வாய்வு பிரச்சனைப் போன்றவைகளுக்கு முடக்கறுத்தான் கீரை சிறந்தது.
    • மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கும் முடக்கறுத்தான் கீரை நல்லது.
    • முதுகெலும்பு தேய்மானம்,  மூட்டு தேய்மானம்,  மூட்டுவலி போன்ற தொந்தரவு உள்ளவர்கள் முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
    • தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்த, இக்கீரையை நன்றாக அரைத்து, தலை முழுவதும் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் பிறகு, தலைமுடியை அலசவும்.


        "நலமுடன் வாழ்வோம்; 

      தமிழ் போல் வளர்வோம்."



    MORINGA LEAF POWDER PREPARATION AT HOME




    MORINGA LEAF POWDER PREPARATION AT HOME:


    • Take required quantity of moringa leaves and wash it. Then spread this on cotton dry cloth and let it rest for dry at least 5 days at home.
    • After drying moringa leaves, you can grind a fine powder and store the moringa powder in a clean and dry airtight container.






    HOW TO PREPARE MORINGA LEAF HEALTH MIX:
    • Take 1 tea-spoon moringa leaf powder and add lukewarm water, stir well. If you need, you filter out it through the strainer.  
    • If you desire, you add honey or palm candy or jaggery.
    • Drink this healthy mix to become a strengthy person.

    வாழைப்பூ துவையல் செய்யலாம் வாங்க!!

               


         வாழைப்பூவைப் பயன்படுத்தி வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ சூப், வாழைப்பூ அடை, வாழைப்பூ துவையல்  என பலவிதமாக சமைத்து சுவைக்கலாம்.

    இப்பதிவில் வாழைப்பூ துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

    வாழைப்பூ துவையல் செய்ய தேவையானப் பொருட்கள்:
    • வாழைப்பூ
    • உளுந்து பருப்பு      - 1 மேஜை கரண்டி
    • பூண்டு                         - 7 பல்கள்
    • சின்ன வெங்காயம் - 10 
    • மிளகு         - 1 தேக்கரண்டி
    • மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கேற்ப)
    • புளி - சிறு எலுமிச்சை அளவு
    • தேங்காய் துருவல் - 1/2 கப்
    • கறிவேப்பிலை   - 1 கைப்பிடி
    • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    • உப்பு  - தேவையான அளவு


    தாளிக்க தேவையானப் பொருட்கள்:

  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு   - சிறிதளவு 
  • உளுந்து பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • வாழைப்பூ துவையல் செய்முறை:
    • வாழைப்பூவின் நடுவிலுள்ள நரம்பை நீக்கி, சுத்தம் செய்து, மோர் அல்லது தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
    • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,  சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, புளி, வாழைப்பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
    • வாழைப்பூ நன்றாக வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    • சூடாறியபின் இவற்றை அரைத்து, தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
    • சூடான சாதத்துடன், நெய் மற்றும்   வாழைப்பூ துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.




        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    சளி, இருமல் போக்கும் தூதுவளை ரசம்

     

       கற்பக மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இந்த கொடி வகை தாவரம், ஈரம் நிறைந்த செழிப்பான இடங்களில், வேலிகள் அல்லது மற்ற செடிகளைப் பற்றி படர்ந்து, புதர் போல வளரும் தாவரமாகும். இத்தாவரத்தில், சிறு சிறு வளைந்த முட்கள், கரும்பச்சை நிற இலைகள், ஊதா நிறப் பூக்கள், உருண்டை வடிவத்தில் சிவப்பு நிற பழங்கள் காணப்படும்.


    தூதுவளை ரசம்:

          சளி,  இருமல் நீங்க தூதுவளை ரசம் நல்ல மருந்தாகும்.

    தேவையானப் பொருட்கள்:
    • தூதுவளை  - 30 இலைகள்
    • மிளகு    - 1 தேக்கரண்டி
    • சீரகம்    -  1 தேக்கரண்டி
    • பூண்டு - 5 பல்கள்
    • மிளகாய் வற்றல்   - 3
    • கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
    • கறிவேப்பிலை  - ஒரு கொத்து 
    • புளி    - பெரிய நெல்லிக்காய் அளவு
    • தக்காளி  - 1(தேவைப்பட்டால்)
    • உப்பு - தேவையான அளவு
    • கடுகு - 1/2 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள்   - சிறிதளவு
    • பெருங்காயம்  - சிறிதளவு      
    தூதுவளை ரசம் செய்முறை:
    • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு, பூண்டு, தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும், பின் இதனை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தூதுவளை விழுதை சேர்த்து வதக்கவும்.
    • பின்பு புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
    • ரசம் கொதித்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.



         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி ஜுஸ்

            இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் "நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி." நெல்லிக்காய், அறுசுவைகளில் கரிப்புத்தன்மை தவிர மற்ற ஐந்து சுவைகளான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு உள்ள மருத்துவக்குணமிக்க ஒரு காய் அல்லது கனி ஆகும்.


     நெல்லிக்காய் சாறு(ஜுஸ்) செய்முறை:


    தேவையானப் பொருட்கள்:
    1. நெல்லிக்காய் - 3
    2. சீரகம்  - 1/4 தேக்கரண்டி
    3. மிளகு  -  1/4 தேக்கரண்டி
    4. இஞ்சி - சிறு துண்டு (1/4)
    5. பச்சைமிளகாய் - சிறு துண்டு (1/4)
    6. கறிவேப்பிலை - சிறிதளவு
    7. புதினா இலைகள் - சிறிதளவு

    செய்முறை:
    • மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேவையென்றால் தேன் கலந்து பருகலாம்.


         
         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    சத்துக்கள் நிறைந்த முருங்கை இலைத் தண்டுப்பகுதி சூப்

            முருங்கை மரத்தின் இலை, தண்டு, பூக்கள், காய், வேர், பட்டை அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளது.

    இந்த வலைப்பதிவில் முருங்கை கீரையின் தண்டினைப் பயன்படுத்தி சூப் செய்வதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.


    முருங்கை  தண்டு
    முருங்கை இலை(கீீரை)

    • முருங்கை இலையை ஆய்ந்தபின் அதன் தண்டுப் பகுதியை வீணாக்காமல், அதில் சூப் செய்து பருகலாம். ஏனென்றால் அவற்றிலும் சத்துக்கள் உள்ளன.

    முருங்கை தண்டு சூப்

    • முருங்கை தண்டினை சுத்தம் செய்து ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு தண்ணீீர் சேர்த்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஒன்று, சிறிதளவு சீீீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து, அந்த நீீரினை வடித்துக் குடிக்கலாம்.



         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    உடல் பலம் பெற உதவும் உளுந்தின் நன்மைகள் மற்றும் உளுந்து கஞ்சி செய்முறை

             இன்றைய நவீன உலகில் வாழ்க்கைத் தேவைகளுக்காக, சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள இயலாமலும், ஓய்வில்லாமலும் நாள்தோறும் இயந்திரம் போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்மையோ, நம் குழந்தைகளையோ கவனித்துக்கொள்ள முடியாமல் இயந்திர வாழ்வில் சிக்கி தவித்து, பணம் சம்பாதிப்பதோடு, நோய்களையும் சம்பாதித்துக் கொள்கிறோம். 

              சிறிதுநேரம் வேலை செய்தால்கூட சோர்ந்துவிடுகிறோம். "நமது ஆரோக்கியம் நமது உணவில்", ஆதலால் நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று. பல ஊட்டச்சத்துகள் நிறைந்த பயறு வகைகள், பருப்பு வகைகள், தானியங்கள் என ஏராளமானவை நம் மண்ணில் விளைகின்றன. இந்த வலைப்பதிவில், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதில் உளுந்து பருப்பு அவசியமான ஒன்று என்பதை தெரிந்துகொள்ளலாம். 

             வெள்ளை உளுந்தைக் காட்டிலும், கறுப்பு உளுந்தில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.

               
    உளுந்திலுள்ள சத்துக்கள்:
    • கார்போஹைட்ரேட்
    • கொழுப்பு
    • புரதம்
    • வைட்டமின் பி(B)
    • ஃபோலிக் அமிலம்
    • கால்சியம்
    • மெக்னீசியம்
    • பொட்டாசியம் 
    • இரும்புச் சத்து

    உணவில் உளுந்து சேர்த்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்:
    • உளுந்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், உணவு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
    • உடல் வலுப்பெற, மெலிந்த உடலைப் பருக்க உளுந்து ஒரு சிறந்த உணவுப்பொருள்.
    • பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட, அடிக்கடி உணவில்  உளுந்து சேர்த்துக்கொள்வது  நல்லது. ஏனென்றால், இதில் உள்ள சத்துக்கள் அவர்களின் இடுப்பு பகுதி வலுப்பெற உதவுகிறது. உளுந்து களி, உளுந்து கஞ்சி, உளுந்துச்சோறு, வடை போன்றவை செய்து தரலாம்.
    • கர்ப்பிணி பெண்கள், தங்களது உணவில் உளுந்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்வதன் மூலம் , இரத்ததில் ஹீமோகுளோப்பின் (haemoglobin) அளவை அதிகரிக்கலாம்.
    • எலும்புகள் வலுப்பெறவும்,உடல் குளிர்ச்சிக்கும் உதவுகிறது.
    • அதிக உடல் சோர்வு, தசை பலவீனம், மூட்டு வலி உள்ளவர்களுக்கு உளுந்து கஞ்சி ஓர் நல் உணவாகும்.

    உளுந்து கஞ்சி செய்முறை:

    தேவையானப் பொருட்கள்:
    • வெள்ளை அல்லது கறுப்பு உளுந்து -1கப்
    • வெல்லம்     - 3/4 கப்
    • ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
    • தேங்காய்ப் பால்   - 1/2 கப்
    • தேங்காய்தத் துருவல் - 1/4 கப்
    செய்முறை:
    • உளுந்தை நன்றாக நீரில் சுத்தம் செய்து, நீருற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
    • ஊற வைத்த உளுந்தை நன்கு மைப் போல அரைத்து,  அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி, மிதமானத் தீயில் காய்ச்சவும்.( சிறிதளவு குடிநீர் அல்லது உளுந்து ஊற வைத்த நீர் சேர்த்துக்கொள்ளவும்).
    • உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை இடைவிடாமல் கிளற வேண்டும்.
    • பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். 
    • ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும்.
    • இறுதியாக தேங்காய்தத் துருவல் சேர்க்க வேண்டும்.
    • இப்போது சூடான,  சுவையான,  ஆரோக்கியமான உளுந்து கஞ்சி தயார்.
    • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

    குறிப்பு:
    • உளுந்தை வறுத்து பொடி செய்து, தேவையான போது உளுந்து கஞ்சி தயாரித்துக்கொள்ளலாம்.

         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    கறிவேப்பிலை பொடி மற்றும் அதன் பயன்கள்

               நமது பாரம்பரிய சமையல் முறையில் கறிவேப்பிலை நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. சமையலில் வாசனைக்காக கறிவேப்பிலை பயன்படுகிறது. ஆனால்,  மருத்துவ குணங்கள் நிறைந்த, காரம் கலந்த கசப்புத்தன்மைக் கொண்ட இந்த கறிவேப்பிலையை சிலர் சாப்பிடும்போது ஒதுக்கிவிடுகின்றனர்.



    கறிவேப்பிலையின் பயன்கள்:
    • இரத்தசோகையைக் குணப்படுத்தும்.
    • சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
    • வலுவான முடி வளர உதவுகிறது.
    • வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவைக்கு உகந்தது.
    • கண்பார்வைக்கு நல்லது.
    • செரிமானத்திற்கு நல்லது.
    கறிவேப்பிலைப் பொடி செய்முறை:
    • கறிவேப்பிலையை நன்றாக நீரில் சுத்தம் செய்து, ஒரு துணியில், நிழலில் உலர்த்தி காய வைக்கவேண்டும்.
    தேவையானப் பொருட்கள்:

    • காய்ந்த கறிவேப்பிலை   - 3 கைப்பிடி 
    • துவரம் பருப்பு          - 1/4 கப்
    • கடலைப் பருப்பு       - 1/4 கப்
    • உளுத்தம் பருப்பு    - 1/4 கப்
    • கொத்தமல்லி விதை(தனியா)               - 1 மேஜை கரண்டி
    • பொட்டுக்கடலை - 1 மேஜை கரண்டி
    • சீரகம்                       - 1 தே. கரண்டி
    • மிளகு                       - 1/2 தே. கரண்டி
    • காய்ந்த மிளகாய் வற்றல்   - 4 (காரத்திற்கேற்ப)
    • பெருங்காயம்          - சிறிதளவு 
    • உப்பு                           - சிறிதளவு 

    செய்முறை:
    • அனைத்துப் பொருட்களையும் மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
    • சூடு ஆறிய பின் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    பயன்படுத்தும் முறை:
    • சூடான சாதத்துடன், நெய் மற்றும் இப்பொடியை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
    • இட்லி, தோசைக்கு பயன்படுத்தலாம்.

    குறிப்பு:
    • தேவையென்றால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."


    முருங்கை இலை பொடி மற்றும் அதன் பயன்கள்

              வாழை மரத்தின் அனைத்தும் பகுதிகளும்  எப்படி நமக்கு பயனளிக்கிறதோ, அதேபோல், முருங்கை மரத்தின் இலை, தண்டு, பூக்கள், காய், வேர், பட்டை அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளது.

    முருங்கை இலை பொடி 

    முருங்கை இலை(கீீரை)


    முருங்கை இலை பொடியிலுள்ள ஊட்டச்சத்துக்கள்:
    • இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன.
    •  ஆண்டிஆக்ஸிடண்ட் (Antitoxidants) அதிகளவில் உள்ளது.
    • பசுமையான முருங்கை இலையைக்காட்டிலும், நிழலில் காய வைத்துப் பொடியாகப் பயன்படுத்தும் போது, அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.
     வைட்டமின்/தாதுக்கள் முருங்கை இலை
    (பசுமையானது)
    முருங்கை இலை
    (பொடி)
     A கேரட்டில் உள்ளதை விட
    4 மடங்கு அதிகம்
     கேரட்டில் உள்ளதை விட 10 மடங்கு அதிகம்
     C ஆரஞ்சில்
    உள்ளதை விட
    7 மடங்கு அதிகம்
    1/2 பங்கு
    உள்ளது
     கால்சியம் பாலில் உள்ளதை விட
    4 மடங்கு அதிகம்
     பாலில் உள்ளதை விட
    17 மடங்கு அதிகம்
     பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளதை விட
    3 மடங்கு அதிகம்
     வாழைப்பழத்தில் உள்ளதை விட
    15 மடங்கு அதிகம் 

     புரதம் 
    தயிரில் உள்ளதை விட
    2 மடங்கு அதிகம் 

    தயிரில் உள்ளதை விட
    9 மடங்கு அதிகம்
     இரும்புச் சத்துபாலக்கீரையில்
    உள்ளதை விட
    3/4 பங்கு உள்ளது 
     பாலக்கீரையில்
    உள்ளதை விட
    25 மடங்கு அதிகம்

    முருங்கை இலை பொடியின் மருத்துவப் பயன்கள்:
    • இரும்புச் சத்து  அதிகளவில் இருப்பதால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தசோகையிலிருந்து விடுபட உதவுகிறது.
    • இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, நீரிழிவு நோயிலிருந்து காக்கிறது.
    • ஆண்டிஆக்ஸிடண்ட் (Antitoxidants) அதிகளவில் உள்ளதால், செல்களில் ஏற்படும் சேதம், வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றது.
    • கால்சியம் மற்றும் வைட்டமின்- D குறைபாட்டினால் ஏற்படும் மூட்டு வலி, கீல்வாதம் (Arthritis, Gout), ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களிலிருந்து விடுபட, முருங்கை இலை பொடியினைத் தொடர்ந்து உட்கொண்டுவர தீர்வு காணலாம்.
    • பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக்கோளாறு, நீர்க்கட்டி(PCOD) இவற்றிலிருந்து குணம் பெற உதவுகிறது.
    • உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, நல்லக் கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. 
    • மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
    • முருங்கை இலை பொடி,  இருதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், ஜீரணக்கோளாறுகளைப் போக்கவும் பயன்படுகிறது.
    • இதனைத் தொடர்ந்துக் குடித்துவர சருமத்தில் ஏற்படும் தொற்றுகளிலிருந்து குணம் பெறலாம்.

    முருங்கை இலை பொடி தயாரிக்கும் முறை:
    • தேவையான அளவு முருங்கை இலையை சேகரித்து, நன்றாக சுத்தம் செய்து (நீரில் கழுவி), நல்ல சுத்தமான துணியில் பரப்பிவிட்டு, 5 நாட்கள் நிழலிலேயே உலர்த்த வேண்டும்.
    • வெயிலில் உலர்த்தும் போது அதன் சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.
    • பின்பு  மிக்ஸியில் நன்கு  பொடியாக அரைத்து  வைத்துக்கொள்ளவும்.
    • சுத்தமான கண்ணாடி கொள்கலனில் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.
    Day 1






    முருங்கை இலை பொடி 

    முருங்கை இலை பொடி - ஜுஸ்

    பயன்படுத்தும் முறை:
    • வெது வெதுப்பான நீரில் ஒரு தே.கரண்டி (1 Tea spoon) முருங்கை இலை பொடியை நன்றாக கலந்து, தினமும் அல்லது வாரத்தில் மூன்று முறை குடித்துவர நல்ல பலனைக் காணலாம்.
    • தேவை ஏற்படின் இதனுடன் சிறிதளவு சுத்தமான தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

    முருங்கை இலைத் தண்டுப் பகுதியைப் பயன்படுத்தும் முறை:

    முருங்கை  தண்டு

    • முருங்கை இலையை ஆய்ந்தபின் அதன் தண்டுப் பகுதியை வீணாக்காமல், அதில் சூப் செய்து பருகலாம். ஏனென்றால் அவற்றிலும் சத்துக்கள் உள்ளன.

    முருங்கை தண்டு சூப்

    • முருங்கை தண்டினை சுத்தம் செய்து ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு தண்ணீீர் சேர்த்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஒன்று, சிறிதளவு சீீீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து, அந்த நீீரினை வடித்துக் குடிக்கலாம்.
    இத்தனை சத்துக்கள் கொண்ட முருங்கையை உணவில் சேர்த்து,  அதன் பயனைப் பெறுங்கள். உணவே மருந்து என்றக் கூற்று உண்மையாகிறது.

         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."


    சளியை விரட்டும் வெற்றிலை சாதம்

    வெற்றிலை சாதம் (Betel leaves rice)

    தேவையானப் பொருள்கள்:
     
    1. வெற்றிலை  - 5 முதல் 10 

    2. மிளகு     - 1 தே.கரண்டி

    3. சீரகம்     -  2 தே. கரண்டி

    4. பூண்டு   - 5 முதல் 7 பல்கள்

    5. சின்ன வெங்காயம் - 5 முதல் 10            
                                  
    6.வேர்க்கடலை  - சிறிதளவு

    7.கடலைப்பருப்பு- சிறிதளவு

    8. உளுந்து        - சிறிதளவு

    9. கடுகு         - 1/2 தே. கரண்டி

    10. கறிவேப்பிலை  - சிறிதளவு

    11. தேங்காய் துருவல் - 1 கப்

    12. வேக வைத்த சாதம்  - 2 1/2 கப்

    13. நல்லெண்ணெய்      - 1 மேஜை கரண்டி

    14. மஞ்சள் தூள்      - 1/4 தே.கரண்டி

    15. காய்ந்த மிளகாய்      - 3 வற்றல்

    16. உப்பு           - தேவையான அளவு

    • வெற்றிலையின் காம்பு பகுதியை நீக்கி சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
    • வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
    வறுத்து அரைக்க தேவையானப் பொருட்கள்:
    ( மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களிலிருந்து)
    •  கடாயில் மிளகு, சீரகம், வெற்றிலை,     1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து  மிதமான தீயில் வறுத்து, நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
    செய்முறை:
    • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
    • பின் வேர்க்கடலை சேர்க்கவும். (முந்திரி)
    • மீதமுள்ள தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
    • அரைத்தக்  கலவையை சேர்த்து நன்கு வதங்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
    • சூடான, சுவையான, சத்தான வெற்றிலை சாதம் தயார்.
    பலன்கள்:
    • அஜீரணக்கோளாறை நீக்கும்.
    • நெஞ்சு சளியை விரட்டும்.
    குறிப்பு:
    • வெற்றிலையும் காரம் என்பதால், குழந்தைகளுக்கு செய்யும் போது தேவைக்கு ஏற்ப காரத்தைக் குறைத்துக்கொள்ளவும்.

        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    சிறுதானியங்களும், நன்மைகளும்.


    சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம். 
    வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்துகொள்ளுங்கள்...

    இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது. பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு, வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து விட்டது. இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக மறந்து விட்டனர்.

    உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.

    சிறுதானியங்கள் என்றால் என்ன?

    உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை. மேலும் சிறுதானியங்கள், மிகவும் பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாகவும், தானிய வகைகளில் முதன்மையானதாகவும் உள்ளது.

    சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நிலத்தில் விதையைத் தூவியதிலிருந்து, குறைந்தது 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். இது அவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. இத்தன்மை மக்கள் தொகை அதிகமுள்ள நிலப்பகுதிகளில் பயனளிக்கக் கூடியது. சிறுதானியங்களை, சரியான முறையில் சேமித்து வைக்கும் பொழுது, அவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

    ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?

    ஊட்டச்சத்துக்கள்: இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவற்றில், வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. பட்டைதீட்டப்பட்ட அரிசியைப் போல் அல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது.



    சிறுதானியங்களை யார் சாப்பிடலாம்?

    சிறுதானியங்களை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

    சிறுதானியத்தை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

    சிறுதானியங்களை சாதமாக சமைக்கும் முன்னர், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். சாதம் நன்கு குழைவாக வேண்டும் எனில், குக்கரில் சமைக்கவும். உதிரியாக வேண்டுமெனில், பாத்திரத்தில் சமைக்கவும். வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை முதலிய தானியங்களை சமைக்க, அவற்றின் அளவைப் போன்று 2 1/4 முதல் 2 1/2 மடங்கு நீர் தேவைப்படும். குக்கரில் சமைக்க 8 நிமிடங்களும், பாத்திரம் எனில் 10 நிமிடங்களும் ஆகும்.

    கம்பு மற்றும் சோளத்தில் சாதம் செய்ய, குறைந்த பட்சம் 15 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். சமைப்பதற்கு 3 முதல் 4 மடங்கு வரை தண்ணீர் தேவைப்படும். சாதம் குக்கரில் வேக 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும். பாத்திரம் எனில், 40 அல்லது 45 நிமிடங்கள் ஆகும்.

    மற்ற உணவு வகைகளான, ரொட்டி, இடியாப்பம், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை, சிறுதானிய மாவில் தயாரிப்பதனால், சமைக்க அதிக நேரம் தேவைப்படாது.

    திணை:
    https://twinbuds.blogspot.com
    திணை


    உலகிலேயே அதிகம்  2வது தானியம் . பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. கண்பார்வைக்கு நல்லது. தாய்பால் சுரக்க உதவும். கபம் தொடர்பான நோய்க்கு நல்லது. வாயுத்தொல்லையை விரட்டும். இதில் தினை மாவு, முறுக்கு, அல்வா, புட்டு, பொங்கல், லட்டு, இட்லி, காரப்பணியாரம். பாயசம், அதிரசம் செய்யலாம்.

    சாமை:
    https://twinbuds.blogspot.com
    சாமை

    புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. இது மலச்சிக்கலைப் போக்க வல்லது. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி, புட்டு, கிச்சடி செய்து சாப்பிடலாம்.


    குதிரைவாலி:
    https://twinbuds.blogspot.com

    சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர். உடலை சீராக வைக்க உதவுகிறது. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது. ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. குதிரை வாலியில் முறுக்கு, சோறு, தோசை,  உப்புமா, கிச்சடி உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

    சோளம்:

    நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் தொடர்பான நோய்கள், சொரியாசிஸ், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் ஏற்றதல்ல. சர்க்கரைநோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்னை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சிறந்தது. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது. சோறு, தோசை, அல்வா, வடை, பாயசம், அடை, பணியாரம் தயாரிக்கலாம்.

    கம்பு:
    அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும்  தன்மை கம்புக்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு.  கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.

    வரகு:
    வரகு

    வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு.  சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.  

    கேழ்வரகு:
    உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன. பாலில்  உள்ள கால்சியத்தை   விட  இதில் அதிகம் உள்ளன. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய்  எதிர்ப்பு சத்தியை  அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும்.

    பனிவரகு: 
    பனிவரகு ஒரு புன்செய் தானியம். சிறுதானியங்களில் குறைந்த காலத்தில் விளைவது இதுதான். குளிர் காலங்களில் அதிகாலையில் பொழியும் பனியின் ஈரப்பதமே இதற்குப் போதும். அதனால்தான் இதற்கு பனிவரகு என்ற பெயர். 
    நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பனியாரம் செய்து சாப்பிடலாம்.

        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."