வாழைப்பூவைப் பயன்படுத்தி வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ சூப், வாழைப்பூ அடை, வாழைப்பூ துவையல் என பலவிதமாக சமைத்து சுவைக்கலாம்.
இப்பதிவில் வாழைப்பூ துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
வாழைப்பூ துவையல் செய்ய தேவையானப் பொருட்கள்:
- வாழைப்பூ
- உளுந்து பருப்பு - 1 மேஜை கரண்டி
- பூண்டு - 7 பல்கள்
- சின்ன வெங்காயம் - 10
- மிளகு - 1 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கேற்ப)
- புளி - சிறு எலுமிச்சை அளவு
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானப் பொருட்கள்:
வாழைப்பூ துவையல் செய்முறை:
- வாழைப்பூவின் நடுவிலுள்ள நரம்பை நீக்கி, சுத்தம் செய்து, மோர் அல்லது தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, புளி, வாழைப்பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- வாழைப்பூ நன்றாக வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- சூடாறியபின் இவற்றை அரைத்து, தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
- சூடான சாதத்துடன், நெய் மற்றும் வாழைப்பூ துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment