சத்தான ஆரோக்கியப் பொடி செய்ய தேவையானப் பொருட்கள்:
1. முந்திரி பருப்பு - 1 Cup
2. பாதாம் பருப்பு - 1 Cup
3. வேர்கடலை - 1 Cup
4. பிஸ்தா பருப்பு - 1 Cup
5. பூசணி விதைகள் (Pumpkin seeds)
- 1 Cup
6. வால்நட் - 1/2 Cup
7. ஏலக்காய் - 1/2 spoon ( 2 or 3 )
செய்முறை :
- இவற்றையெல்லாம் மிதமான தீயில் வறுத்து, நன்கு ஆற வைத்தப் பின்பு கொர கொரப்பான பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ளவும். (ஏனென்றால் அனைத்திலும் எண்ணெய் சத்து உள்ளது).
பயன்படுத்தும் முறை:
- ஒரு டம்ளர் பாலைக் காய்ச்சி, அதில் ஒரு தே.கரண்டி இந்த பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்க வேண்டும்.
- பிறகு பாலை வடிகட்டி, இந்த சுவையான ஆரோக்கிய பாலை(health mix drink) அருந்தலாம்.
குறிப்பு:
- குழந்தை பிறந்து 8 மாதத்திற்கு பிறகு இதனைத் தயாரித்து கொடுக்கலாம்.
- அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment