முருங்கை இலை பொடி மற்றும் அதன் பயன்கள்

          வாழை மரத்தின் அனைத்தும் பகுதிகளும்  எப்படி நமக்கு பயனளிக்கிறதோ, அதேபோல், முருங்கை மரத்தின் இலை, தண்டு, பூக்கள், காய், வேர், பட்டை அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளது.

முருங்கை இலை பொடி 

முருங்கை இலை(கீீரை)


முருங்கை இலை பொடியிலுள்ள ஊட்டச்சத்துக்கள்:
  • இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன.
  •  ஆண்டிஆக்ஸிடண்ட் (Antitoxidants) அதிகளவில் உள்ளது.
  • பசுமையான முருங்கை இலையைக்காட்டிலும், நிழலில் காய வைத்துப் பொடியாகப் பயன்படுத்தும் போது, அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.
 வைட்டமின்/தாதுக்கள் முருங்கை இலை
(பசுமையானது)
முருங்கை இலை
(பொடி)
 A கேரட்டில் உள்ளதை விட
4 மடங்கு அதிகம்
 கேரட்டில் உள்ளதை விட 10 மடங்கு அதிகம்
 C ஆரஞ்சில்
உள்ளதை விட
7 மடங்கு அதிகம்
1/2 பங்கு
உள்ளது
 கால்சியம் பாலில் உள்ளதை விட
4 மடங்கு அதிகம்
 பாலில் உள்ளதை விட
17 மடங்கு அதிகம்
 பொட்டாசியம் வாழைப்பழத்தில் உள்ளதை விட
3 மடங்கு அதிகம்
 வாழைப்பழத்தில் உள்ளதை விட
15 மடங்கு அதிகம் 

 புரதம் 
தயிரில் உள்ளதை விட
2 மடங்கு அதிகம் 

தயிரில் உள்ளதை விட
9 மடங்கு அதிகம்
 இரும்புச் சத்துபாலக்கீரையில்
உள்ளதை விட
3/4 பங்கு உள்ளது 
 பாலக்கீரையில்
உள்ளதை விட
25 மடங்கு அதிகம்

முருங்கை இலை பொடியின் மருத்துவப் பயன்கள்:
  • இரும்புச் சத்து  அதிகளவில் இருப்பதால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தசோகையிலிருந்து விடுபட உதவுகிறது.
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, நீரிழிவு நோயிலிருந்து காக்கிறது.
  • ஆண்டிஆக்ஸிடண்ட் (Antitoxidants) அதிகளவில் உள்ளதால், செல்களில் ஏற்படும் சேதம், வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றது.
  • கால்சியம் மற்றும் வைட்டமின்- D குறைபாட்டினால் ஏற்படும் மூட்டு வலி, கீல்வாதம் (Arthritis, Gout), ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களிலிருந்து விடுபட, முருங்கை இலை பொடியினைத் தொடர்ந்து உட்கொண்டுவர தீர்வு காணலாம்.
  • பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக்கோளாறு, நீர்க்கட்டி(PCOD) இவற்றிலிருந்து குணம் பெற உதவுகிறது.
  • உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, நல்லக் கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. 
  • மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
  • முருங்கை இலை பொடி,  இருதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், ஜீரணக்கோளாறுகளைப் போக்கவும் பயன்படுகிறது.
  • இதனைத் தொடர்ந்துக் குடித்துவர சருமத்தில் ஏற்படும் தொற்றுகளிலிருந்து குணம் பெறலாம்.

முருங்கை இலை பொடி தயாரிக்கும் முறை:
  • தேவையான அளவு முருங்கை இலையை சேகரித்து, நன்றாக சுத்தம் செய்து (நீரில் கழுவி), நல்ல சுத்தமான துணியில் பரப்பிவிட்டு, 5 நாட்கள் நிழலிலேயே உலர்த்த வேண்டும்.
  • வெயிலில் உலர்த்தும் போது அதன் சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.
  • பின்பு  மிக்ஸியில் நன்கு  பொடியாக அரைத்து  வைத்துக்கொள்ளவும்.
  • சுத்தமான கண்ணாடி கொள்கலனில் சேகரித்து வைத்துக்கொள்ளவும்.
Day 1






முருங்கை இலை பொடி 

முருங்கை இலை பொடி - ஜுஸ்

பயன்படுத்தும் முறை:
  • வெது வெதுப்பான நீரில் ஒரு தே.கரண்டி (1 Tea spoon) முருங்கை இலை பொடியை நன்றாக கலந்து, தினமும் அல்லது வாரத்தில் மூன்று முறை குடித்துவர நல்ல பலனைக் காணலாம்.
  • தேவை ஏற்படின் இதனுடன் சிறிதளவு சுத்தமான தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கை இலைத் தண்டுப் பகுதியைப் பயன்படுத்தும் முறை:

முருங்கை  தண்டு

  • முருங்கை இலையை ஆய்ந்தபின் அதன் தண்டுப் பகுதியை வீணாக்காமல், அதில் சூப் செய்து பருகலாம். ஏனென்றால் அவற்றிலும் சத்துக்கள் உள்ளன.

முருங்கை தண்டு சூப்

  • முருங்கை தண்டினை சுத்தம் செய்து ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு தண்ணீீர் சேர்த்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஒன்று, சிறிதளவு சீீீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து, அந்த நீீரினை வடித்துக் குடிக்கலாம்.
இத்தனை சத்துக்கள் கொண்ட முருங்கையை உணவில் சேர்த்து,  அதன் பயனைப் பெறுங்கள். உணவே மருந்து என்றக் கூற்று உண்மையாகிறது.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."


No comments:

Post a Comment