பாட்டி வைத்தியம் - 3

  • வால்மிளகு --> பல் நோய், சீதம், தாகம், வாதம், பித்தம் போகும்.
  • வெந்தயம் --> எரிவு,  கபம், சீதக்கழிச்சல், பௌத்திரம் போகும். தேகம் குளிர்ச்சி பெறும். மமுடி உதிர்வதைத் தடுக்கும்.
  • வெந்தயக்கீரை --> கபம், பொருமல், மந்தம் போகும்.
  • வெந்நீர் --> இருமல், கம்மல், சீதக்கட்டு, கண் நீர் வடிதல், முகசன்னி, வாதசன்னி மறையும்.
  • வெள்ளரிக்காய் --> நீர்க்கடுப்பு, கரப்பான், உள்ளரிப்பு தீரும்.
  • பாதாம் பருப்பு -->  உடல் வலிமை பெறும்.
  • கசகசா --> வறட்டு இருமல் போகும். உடல் அரிப்பு நீங்கும்.
  • பாகற்காய் --> நீரிழிவு நோய் போகும்.
  • சுண்டைக்காய் --> வயிற்றுப்பூச்சி கொல்லும். மார்சளி நீங்கும்.
  • தேங்காய்ப்பால் --> வயிற்றுப்புண் ஆறும்.
  • துளசிநீர் --> மூளை பலம் பெறும்.
  • பிஞ்சு கேரட் --> குழந்தைகளின் பற்கள் சுத்தமாகும்.
  • கீரைகள் --> கண் கூச்சம் போகும்.
  • துளசி --> இரத்தக்கொதிப்பு, இருதய நோய் தடுக்கும்.
  • கொய்யாப் பழம் --> நீரிழிவு நீங்கும். பல்லில் இரத்தம் வடிதல் நிற்கும்.
  • செம்பருத்தி --> உடல் சூடு தணியும்.
  • நாயுருவி --> தேமல் மறையும்.
  • வெள்ளைப் பூண்டு --> மூட்டு வலி, முதுகுவலி போகும். காது இரைச்சல் போகும்.
  • நாமக்கட்டி --> சேற்றுப் புண் ஆற்றும்.
  • அரைக்கீரை --> சிறுநீர்க் கோளாறுகளை சரியாக்கும்.
  • பெருங்காயம் --> வாயு நீங்கும்.
  • நன்னாரி --> சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
  • கீழாநெல்லி --> மஞ்சள் காமாலை போக்கும்.
  • கறிவேப்பிலை --> பித்தம் தீரும். சரும நோய் தீரும்.
  • குப்பைமேனி -> ஒற்றைத் தலைவலி நீங்கும்.
  • வேர்க்கடலை  --> காச நோயைத் தடுக்கும்.
  • நந்தியாவட்டைப்பூ --> கண் எரிச்சல் போகும்.
  • பால் --> குடல் புண் நீக்கும்.
  • முட்டைகோஸ் --> இரைப்பையை பலப்படுத்தும்.
  • சுக்கு --> பித்தம் தீர்க்கும்.
  • பசலிக்கீரை --> கைகால் அசதி நீங்கும்.

 

"நலமுடன் வாழ்வோம்;  
தமிழ் போல் வளர்வோம்."




No comments:

Post a Comment