Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

முன்னுரை :
             ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர்.

பொருளுரை:
 பிறப்பு:     

             திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை. அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்தார். அவர் ஆதி – பகவன் என்பவருக்கு மகனாகப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். 

மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.

     காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் தனது புதல்வியான வாசுகியயை வள்ளுவருக்கு திருமணம் முடித்ததாக கூறப்படுகிறது.

சிறப்புப்பெயர்கள்:

திருவள்ளுவர் பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்படுகிறார். அவை:

  • தேவர்
  • நாயனார்,
  • தெய்வப்புலவர்,
  • செந்நாப்போதர்,
  • பெருநாவலர்,
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர்
  • மாதானுபங்கி
  • முதற்பாவலர்

சிறப்பு:
    புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக, தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டு பொங்கல் தினத்தன்று திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது.

புலவர்களின் பாராட்டுகள்:

      பல புலவர்கள் இணைந்து தொகுத்த, 

திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.

இவரை,

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என பாரதியாரும்

"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

திருக்குறள்:

          பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை', திருவள்ளுவம்’,  ‘ஈரடி நூல்’  பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

        திருக்குறள், மனிதர்கள் தம் அக, புற வாழ்வில் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழ தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

நூற்பிரிவு:

 இயல் - 9

அதிகாரம்-133

குறள்  - 1330

அறத்துப்பால்:

திருக்குறளின்  முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன. 4 அதிகாரங்கள் பாயிரவியலிலும், 20 அதிகாரங்கள் இல்லறவியலிலும்,13 அதிகாரங்கள் துறவறவியலிலும்,  இறுதியாக ஊழியலில் ஒரு அதிகாரமும் என வகைபடுத்தப்பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. 

பொருட்பால்:   

            அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய மூன்று இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்களும், அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

இன்பத்துப்பால்:

கடைசிப்பாலாகிய இன்பத்து அல்லது காமத்துப்பாலில் களவியல், கற்பியல் என இரண்டு இயல்கள் உள்ளன. 
களவியலில் 7 அதிகாரங்களும்,கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.

நினைவுச்சின்னம்:

                   இந்தியாவின் தென் கோடியில், முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதனை வடிவமைத்த "சிற்பி கணேசன்" அவர்கள் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடையது.

        1960இல் திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

முடிவுரை:  

                   தன்னுடைய சிந்தனைத் திறத்தால், அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகவும், தமிழர்களுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளது என்றும் சொன்னால் அது மிகையாகாது.